கோவை கவுண்டம்பாளையம் பி & டி காலனி பகுதியில், நியூ கோவை ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி பிரீமியம் வீட்டு மனை திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக சக்தி குழுமத் தலைவர் மாணிக்கம் கலந்துகொண்டு திட்டத்தை துவக்கி வைத்தார். யுனிவர்சல் ரேடியேட்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஷ் மாதவன் வாழ்த்துரை வழங்கினார்.

மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறுவாணி குடிநீர் வசதி, தார்சாலை, தெருவிளக்குகள், இயற்கை சூழல், அடித்தள வடிகால் அமைப்பு, சுற்றுச்சுவர், மேம்படுத்தப்பட்ட பூங்கா, பிக்கிள்பால் மைதானம், நடைபாதை உள்ளிட்ட பல நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட நகரமைப்பு திட்ட ஒப்புதல் மற்றும் நில ஆவண ஒழுங்குமுறை அங்கீகாரம் பெற்ற இத்திட்டம், வாஸ்து முறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட வீட்டு மனை பகுதிகளைக் கொண்டதாகும். மொத்தம் 53 வீட்டு மனைகள் இதில் அமையும்.

விழாவில் சக்தி குழுமத் தலைவர் மாணிக்கம் பேசுகையில்: பவுண்டேஷன் ஒன் குழுமத்தின் தலைமை பொறுப்பை ராஜ்குமார் ஏற்று சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையில், கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல வீட்டு மனை, வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை வெற்றிகரமாக உருவாக்கி வழங்கியுள்ளோம்.

அந்த வரிசையில், மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி திட்டம், சுமார் 3.75 ஏக்கர் பரப்பளவில் விரிவாக வடிவமைக்கப்பட்ட பிரீமியம் வீட்டு மனை திட்டமாகும். தற்போது 50 சதவீத வீட்டு மனைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

பவுண்டேஷன் ஒன் குழுமத்தின் தலைவர் ராஜ்குமார் பேசுகையில்: பல ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். தரமான கட்டமைப்பு, சிறந்த வசதிகள் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி என்பதே எங்களின் முதன்மை நோக்கம்.

மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி திட்டமும் இதே தரநிலைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் விற்பனை மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப ரூ.25 லட்சம் முதல் வீடுகள் கட்டித் தரப்படும். தொடர்ந்து, நஞ்சுண்டாபுரம், கிருஷ்ணா காலனி பகுதியில் புதிய திட்டமும் விரைவில் தொடங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.