இந்தியாவின் 79வது சுதந்திர நாளை முன்னிட்டு, அரசூரில் இண்டோஸ்டேட்ஸ் ஹெல்த், தனது வருமுன் காக்கும் மருத்துவ மையத்தை தொடங்கியுள்ளது. கோவையின் சாதனை பெண்மணி கமலாத்தாள் இந்த மையத்தை திறந்து வைத்தார். இதனுடன் இண்டோஸ்டேட்ஸ் ஹெல்த் ஆப் என்ற புதிய டிஜிட்டல் செயலியை  விஜயலட்சுமி துவக்கி வைத்தார். வரும் முன் காக்கும் மருத்துவ வசதிகள் அனைத்தையும் இண்டோஸ்டேட்ஸ் ஹெல்த் ஒரே கூரையின் கீழ் அளிக்கிறது.

இதுகுறித்து இண்டோஸ்டேட்ஸ் ஹெல்த் மருத்துவ மையத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ராஜேஷ் ரங்கசாமி கூறுகையில்: இந்த விடுதலை நாளில், மக்கள் உடல்நல விடுதலையை உணர வேண்டும். விழிப்புணர்வு, தொழில்நுட்பம் மற்றும் முன்கூட்டியே நோய் கண்டறிதல் என்பது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு வழி என்று கூறினார்.

இண்டோஸ்டேட்ஸ் நிறுவனர்கள் டாக்டர் ராஜேஷ் ரங்கசாமி, டாக்டர் நித்யா மோகன், அரசூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கோவிந்தராஜ், மருத்துவர்கள் வாணி மோகன், மோகன், முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் லோகேஷ், மையத்தின் மேலாளர் அய்யப்பன் ஆகியோர் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.