துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மாதம் 1 முறை நடைபெறும். அந்நாளில் அந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோக பணிகள் வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நிறுத்தப்படும். இதனால் அதனிடம் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் தற்காலிக மின்தடை ஏற்படும்.

அந்த வகையில் நாளை (27.11.26) கோவையில் 2 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

ரேஸ் கோர்ஸ் துணை மின் நிலையம்

இதன்கீழ் வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்விநியோகம் தடைபடும்.

மின்தடை ஏற்படும் இடங்கள் : தாமஸ் பாா்க், காமராஜா் சாலை, பந்தய சாலை, அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியா் அலுவலகம் வரை), திருச்சி சாலை (ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகா் கோயில் வரை), ராமநாதபுரம் 80 அடி சாலை, ஸ்ரீபதி நகா், சுசீலா நகா், ருக்மணி நகா், பாரதி நகா் 1 முதல் 6 ஆவது வீதிகள் வரை, பாப்பம்மாள் லே-அவுட், பாா்க் டவுன், கருணாநிதி நகா், அங்கண்ணன் வீதி.

அரசூர் துணை மின் நிலையம்

இதன்கீழ் வரும் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்விநியோகம் தடைபடும்.

மின்தடை ஏற்படும் இடங்கள் : அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன் புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்புநகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம்பாளையம் மற்றும் மோளபாளையம்.