துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படுவது வழக்கம். இதுகுறித்த முன்கூட்டியே அறிவிக்கப்படும். அந்த வகையில் கோவை மாவட்டத்திலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நாளை (மே 20) ஒரு சில பகுதிகளில் மட்டுமே மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்துக்கவுண்டன்புதுார் துணை மின் நிலையம்

முத்துக்கவுண்டன்புதுார் சாலை, பை-பாஸ் ரோடு ஒருபகுதி, குரும்பபாளையம் ஒருபகுதி, நீலாம்பூர், லட்சுமி நகர், அண்ணா நகர், குளத்துார் ஆகிய இடங்களில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின் தடை ஏற்படும்.