கோவை வ.உ.சி பார்க், கோ-ஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலையத்தில், பட்டு மேளா – பழசுக்கு புதுசு சிறப்புத் தள்ளுபடி விற்பனை செப்டம்பர் 30 வரை நடைபெற உள்ளது.
கோவையில் கோ – ஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலையத்தில் பழசுக்கு புதுசு சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் அம்சவேணி, துணை மண்டல மேலாளர் லட்சுமி பிரபா, மருதம் விற்பனை நிலைய மேலாளர் செல்வதுரை, விஜயானந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முதல் விற்பனையை கோ-ஆப்டெக்ஸின் பெருமைமிகு வாடிக்கையாளர் அனுராதா பெற்றுக் கொண்டார்.
பழசுக்கு புதுசு சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய பட்டுப் புடவைகளை மாற்றிக் கொண்டு அதற்கான மதிப்பில் தங்களுக்கு தேவைப்படும் வேறு எந்த இரகங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்விற்பனைக்காக கண்கவர் வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் பட்டு சேலைகள், மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், இயற்கை சாயமிட்ட பருத்தி காட்டன் சேலைகள், காஞ்சி காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், சுங்குடி சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதார் இரகங்கள், குர்தீஸ், நைட்டிகள், ஆடவர்களுக்கான ரெடிமேட் சட்டைகள் ஏராளமாக வரவழைக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஞாயிறு உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் மருதம் விற்பனை நிலையம் செயல்படும். மாதாந்திர சேமிப்பு திட்டம் ரூ.300லிருந்து ஆரம்பமாகிறது. வாடிக்கையாளர்கள் 11மாத சந்தா தொகையை செலுத்தினால் 12வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தும். சேமிப்புத்திட்ட வாடிக்கையாளர்கள் கூடுதல் முதிர்வுத் தொகைக்கு துணிகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் சேமிப்புத் திட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கூடுதல் சலுகையாக வருடம் முழுவதும் 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் என முதுநிலை மண்டல மேலாளர் அம்சவேணி தெரிவித்தார்.
