பேரூர் ஆதினம் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் அரச மரங்களை நடுவதற்காக “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்திற்கான திட்ட துவக்க விழா வியாழக்கிழமை (24.4.2025) நடைபெற்றது.

1 49
இவ்விழாவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவர் சின்னசாமி, நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகன், சிவகாசி பசுமை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் மற்றும் காவேரி கூக்குரல் இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் ஆகியோர் இணைந்து முதல் மரக் கன்றினை நட்டு திட்டப் பணிகளை துவக்கி வைத்தனர்.