சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை இசை மற்றும் நடனத்துடன் கொண்டாடப்பட்டது. நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் ராஜ்குமார், இயக்குனர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தாளாளர் லட்சுமி நாராயணசாமி, சுகுணா லட்சுமி நாராயணசாமி மற்றும் செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
