மாணவர்களுக்கு தொழில் துறையில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான திறனறிவை வளர்க்கும் நோக்கில் டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘என்ஜிபி எக்ஸ்போ’ நடைபெற்றது.
தொடக்க விழாவை கல்லூரியின் தாளாளர் டாக்டர் தவமணி பழனிசாமி தொடங்கி வைத்தார். 60க்கும் மேற்பட்ட அரங்குகள் மாணவர்களால் அமைக்கப்பட்டன. இந்த அரங்குகள் மூலம் மாணவர்கள் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள், சந்தைப்படுத்தல் உத்திகள், விற்பனை திறன்கள், வணிக நுட்பங்கள், சந்தை பகுப்பாய்வு, சந்தை போட்டி திறன்கள், தலைமைப்பண்புகள், குழுவாக ஒருங்கிணைந்து செயலாற்றும் திறன்கள் போன்ற பல்வேறு திறன்களைப் பெற்றனர்.
இந்நிகழ்வில், டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சரவணன், கல்விசார் இயக்குநர் ராமமூர்த்தி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். இந்த நிகழ்வு மாணவர்களுக்கு தொழில் முனைவோர் திறன்களை வளர்த்தெடுப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.