இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (08-02-2024)சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், இந்நிகழ்வில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதீஷ் பிரபு, முதல்வர் பொன்னுசாமி, கல்லூரியின் முன்னாள் முதல்வர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.