நேரு கல்வி குழுமங்களின் நிறுவனத் தலைவர் ஸ்ரீ பி. கே. தாஸ் 16வது நினைவு தினம் திருமலையாம்பாளையத்தில் உள்ள பி. கே. தாஸ் ஆடிட்டோரியத்தில் திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிறுவனர் தலைவரின் நினைவாக மலர் அஞ்சலி, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது வாழ்க்கை, சாதனைகளை விளக்கும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. விழாவில் ஸ்வயம்பு குரு மஹா சன்னிதானத்தில் ராஜா தேவேந்திர சுவாமிகளின் ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது.
நேரு கல்வி குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளரான கிருஷ்ணகுமார், தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் தனது நீண்ட நாள் கனவான நேரு குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் தற்போது பி. கே. தாஸ் டீம்ட் யுனிவர்சிட்டியாக உருவெடுத்துள்ளதை பகிர்ந்துகொண்டு நன்றி தெரிவித்தார்.
அனைத்து நேரு கல்வி குழும நிறுவனங்களின் முதல்வர்கள் விழாவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நிகழ்வின் போது 10, 12ம் வகுப்புத் தேர்வுகளை வெற்றிகரமாக முடித்த என்ஜிஐ ஊழியர்களின் 33 குழந்தைகளுக்கு நினைவுப் பரிசு, எழுதுபொருட்கள் அடங்கிய பள்ளிப் பை, சான்றிதழ் வழங்கப்பட்டது