இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட துவக்க விழா மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அண்ணாதுரை பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து உலக அமைதி நாளினை முன்னிட்டு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, ஓவியம் எனப் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பொன்னுசாமி தலைமை வகித்தார். 300க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.