திருப்பூர் அவிநாசியில் உள்ள ஸ்ரீ நாச்சம்மாள் வித்யாவாணி சிபிஎஸ்இ சீனியர் செகண்டரி பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் இணைந்து யோகா பயிற்சிகளை செய்தனர்.

பள்ளியின் தாளாளர் விநாயகம் முன்னிலை வகித்தார். இதில் தலைமை விருந்தினராக அமெரிக்காவின் முன்னணி மனநல மருத்துவரும், ‘மவுனம்’ நிறுவன இயக்குநர் இளங்கோவன், சிறப்பு விருந்தினராக யூனிட்டி ஓவர்சீஸ் திருப்பூர் எம்பிராய்டரி சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டனர். பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.