மருதமலை பிரதான சாலையில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் தார் சாலைப் பணிகளை, அமைச்சர் சம்பத்குமார் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மருதமலை பிரதான சாலையில், வடகோவை முதல் IOB காலனி வரை, சுமார் 4.3 கி.மீட்டர் தொலைவிற்கு, கோயம்புத்தூர் மாநகராட்சியின் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட தார் சாலைகளை நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், சீரமைக்கும் பணிகளை அமைச்சர் சம்பத்குமார் நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.