அஜ்ஜனூரில் உள்ள பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியில், குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின. விழாவில் பள்ளி முதல்வர் வித்யாசங்கர், குழந்தைகள் தங்களின் தேடல் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவும், மகிழ்ச்சியுடன் கற்கவும், நற்பண்புகளையும் மனிதநேயத்தையும் வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிக்கவும் மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.