தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கே. பாக்யராஜின் நினைவைப் போற்றும் வகையில் மலரஞ்சலி நிகழ்ச்சி, கோவை நவ இந்தியாவில் உள்ள எஸ்.என்.ஆர். ஆடிட்டோரியத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைக்கதைகளால் ரசிகர்களின் மனதில் அழியாத இடம்பிடித்த பாக்யராஜ், “திரைக்கதை மன்னன்” என்று போற்றப்பட்டவர். அவர் கடந்த ஜூன் 27, 2026 அன்று காலமானார்.

நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார், பாக்யராஜின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். மேலும், பாக்யராஜின் நீண்டகால நண்பரும், திரைப்பட இயக்குநருமான ஆர். சுந்தர்ராஜன், அவருடனான தனது நட்பு மற்றும் மறக்க முடியாத நினைவுகளைப் பகிர்ந்து சிறப்புரையாற்றினார்.

WhatsApp Image 2026 07 11 at 6.19.47 PM 1

இந்த நிகழ்ச்சியில் பாக்யராஜ் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு பங்கேற்றனர். மேலும் அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், கோவையின் முன்னாள் மேயர் வி. கோபாலகிருஷ்ணன், ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன், லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனலின் முன்னாள் சர்வதேச இயக்குநர் ராமகிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட ஆளுநர் மனோகரன், தி இந்து கோவை பொது மேலாளர் சிவகுமார், சசி அட்வர்டைசிங் நிறுவனத்தின் சுவாமிநாதன் மற்றும் பாக்யராஜ் ரசிகர் மன்றத்தினர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.