ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஐ க்யூப் என்ற உலகின் முக்கியமான 12 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வர் சௌந்தரராஜன் வரவேற்புரை ஆற்றினார். எஸ்.என்.ஆர் அண்ட் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியபோது, உலகில் மிக முக்கியமான நிறுவனங்களுடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்குதல், கல்வி மற்றும் தொழிலில் அதன் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்கு மிகவும் உறுதுணையாக உள்ளது என தெரிவித்தார்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் ஏ.டபுள்யூ.எஸ் அகாடமி, ஆட்டோடெஸ்க் போன்ற 12 நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் எஸ்.என்.ஆர் அண்ட் சன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், ஐ.சி.டி அகாடமியின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீகாந்த், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி துணை முதல்வர் கருப்புசாமி, துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.