இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மற்றும் எஜூடெக்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒருநாள் செயல்முறைப் பயிற்சித் திட்டம் நடைபெற்றது.

இதன் மூலம் மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த பயிற்சிகள், சான்றிதழ் பயிற்சிகள், தொழில்துறை திட்டங்கள், வல்லுநர் சொற்பொழிவுகள் மற்றும் வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்து வழங்கப்பட உள்ளன.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் நடராஜன், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் ஜமீர் பாஷா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.