சீர்மிகு நகர திட்டத்தின் (ஸ்மார்ட் சிட்டி திட்டம்) கீழ் வாலாங்குளம் பகுதி மேம்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டது. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் அந்த இடம் அழகிழந்து காணப்படுகிறது.

11. c scaled

11 scaled

குளக்கரை அருகே சிறுவர்கள் விளையாட அமைக்கப்பட்ட பல அமைப்புகள் உடைந்துபோய் உள்ளது. மேலும் பழுதடைந்த நிலையில் உள்ள அமர்விடங்களில் எவ்வித அச்சமுமின்றி இளம் நண்பர்கள் ஹாயாக மணிக்கணக்கில் நின்று உரையாடுகின்றனர். சில இடங்களில் நுழைய காவல் துறை தடுப்புகளை வைத்திருந்தாலும், அதை நகரத்திவிட்டு நுழைகின்றனர்.

11. a 1 scaled

மாலை நேரங்களில் உக்கடம் வழியே வந்து வாலாங்குளம் கரை அருகே அமைந்துள்ள குறுக்கு பாதையில் செல்லும் இடத்தில் போதிய வெளிச்சம் இருப்பதில்லை. இந்நேரத்தில் இந்த வழியே செல்லும் வாகனஓட்டிகள் பலருக்கும் இது ஆபத்தானதாக மாறக்கூடும். இந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுவது இல்லை எனவும் குற்றசாட்டுகள் உள்ளது.

எனவே மாநகராட்சி இப்பகுதியை விரைந்து அழகுபடுத்தி சீரமைக்கவேண்டும் எனவும் இதை பயன்படுத்த பாதுகாப்பான இடமாக மாற்றிடவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.