டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் சின்னம்பாளையம், ஊஞ்சவேலம்பட்டி கிராமங்களில் நடைபெற்று வருகிறது.

முகாமின் ஒரு பகுதியாக ஊஞ்சவேலம்பட்டி பள்ளியில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு மேலாளர் நாகராஜன் வரவேற்புரை ஆற்றினார்.

MCET 2

சிறப்புரையில், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் செழியன் பேசுகையில்: 18 வயது முடியாமல் வாகனங்களை இயக்கக் கூடாது. 18 வயது முடிந்த பின்பு கட்டாயம் ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். வாகனங்கள் ஓட்டும் போது சீட் பெல்ட், ஹெல்மெட் அணிய வேண்டும். இதனால் வரக்கூடிய நன்மைகள், தீமைகளை தெளிவாக எடுத்துக் கூறினார்.

விழாவில் முன்னாள் மாவட்ட முதன்மை போக்குவரத்துக் காப்பாளர் கமலக்கண்ணன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ரமேஷ், பள்ளி தலைமை ஆசிரியை தெய்வானை, நாட்டு நலபணி திட்ட மாணவர்கள், பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.