கோவை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘விருட்சம் 2025’ என்ற பெயரில் “என் கல்லூரி, என் வளர்ச்சி” என்ற கருப்பொருளில் 16வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி தலைமையில் நடைபெற்ற இதில் விப்ரோ நிறுவனத்தின் தேசிய பணியமர்த்துதல் தலைவர் ராதிகா ரவி சிறப்பு விருந்தினாராக பங்கேற்று கல்வி, ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார். கல்லூரியின் செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் சரவணன் ஆண்டறிக்கையை வாசித்தார்.

முதலாவதாக பேசிய கே.பி.ராமசாமி “கே.பி.ஆர் கல்லூரி மாணவர்கள் தொழிற்துறைக்கு சிறந்த பொறியாளராக மட்டுமில்லாமல் நாட்டிற்கு சிறந்த குடிமகனாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் மற்றும் அதை நோக்கியே செயல்பட்டு வருகிறோம்” என்றார்.

தொடர்ந்து மாறி வரும் உலகிற்கு ஏற்றவாறு எல்லா வகையிலும் மாறுவதே சிறந்த கற்றல் ஆகும் என்று விப்ரோ பணியமர்த்துதல் தலைவர் ராதிகா ரவி பேசினார். மேலும் சமூக வலைதளைங்களை நல்வழியில் பயன்படுத்தி முன்னேறுவது பற்றி சிறந்த உதாரணங்களைக் கூறி விளக்கினார்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக கல்லூரியின் ‘ப்ரொகிரெஸ்ஸிவ் கேபிஆர்’ என்ற ஆவணத் தொகுப்பு வெளியிடப்பட்டது. விழாவில் மாணவ மாணவிகள், பேராசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.