கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி, இந்திய தரநிலைகள் பணியகம் உடன் இணைந்து தொடங்கப்பட்ட தரவுகள் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் கற்றல் மையத்தின் துவக்க விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் இந்திய தரநிலைகள் பணியகத்தின் மூத்த இயக்குனர் பவானி கலந்து கொண்டு மையத்தினை துவக்கி வைத்தார். நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் ராமசாமி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் இயக்குனர் சாந்தி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்