கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் 2020 – 2023ம் கல்வியாண்டில் பயின்ற மாணாக்கர்களுக்கு  பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

கே.பி.ஆர் கல்வி குழுமங்களின் தலைவர்  கே.பி.ராமசாமி, செயலர்  காயத்ரி அனந்தகிருஷ்ணன், கல்லூரியின் முதல்வர்  கீதா நிகழ்வில் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக  கிராப்டன் இந்தியா மக்கள் தொடர்பு செயல்பாட்டாளர் சவ்ரப்ஷ  கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில் 528 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

சிறப்பு விருந்தினர் பேசுகையில், மாணவர்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டு இருக்கவேண்டும்.  இந்தியாவின் இளம் தலைமுறையினர் புதிய தொழிற்நுட்பங்களை வாழ்வில் நடை முறைப்படுத்த வேண்டும் என்றார்.