கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் ‘உற்சவம்26’ எனும் ஆண்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக, இந்தியம் நிறுவனத்தின் மேலாளர் ராம் கலந்துகொண்டார். கல்லூரிச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பேராசிரியர்கள், மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. விழாவில், கல்லூரி முதல்வர் கீதா, செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
