கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி யூத் ரெட் கிராஸ் மற்றும் கே.எம்.சி.ஹெச். மருத்துவ மையம் மருத்துவமனை இணைந்து  நடத்திய “உறுப்பு தான பயிலரங்கம்” நடைபெற்றது.

இந்நிகழ்விற்குக் கல்லூரியின் முதல்வர் கீதா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக  கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை மருத்துவர் விஷ்வ குமார் பிரபாகரன்  கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். அவர்தம் உரையில் உறுப்பு தானம் இன்றியமையாமை மற்றும் அதன் வகைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மனிதனுக்குக் கிடைத்த வரம் இறந்த பின்னும்  பிறிதொரு உடலில் இருந்து வாழும் பாக்கியம் மாதப்பிறப்பிற்கு மட்டுமே என்பதனை காணொலி விளக்கப்படங்கள் வழி விளக்கினார். மாணவர்களின் வினா-விடை உரையாடல் மூலம் பல செய்திகள் பகிர்ந்துகொண்டார்.

kpr 2

மருத்துவமனை விளம்பரப்பிரிவு முதன்மை மேலாளர் பிரகாஷ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைப்பிரிவு மேலாளர் கீதா ஆகியோர் உறுப்பு தானப்பதிவு முறைகள் பற்றி விளக்கினர். மேலும், பேராசிரியர்கள் ஆனந்த் ஜெரால்டு, ராஜேஷ் வெங்கடேசன் தொடங்கி வைத்த உறுப்பு தான உறுதிமொழி ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டனர்.

ரெட் யூத் கிராஸ் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் தாரணி, மேகலா ஸ்ரீதேவி ஒருங்கிணைத்த இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் என சுமார் 230க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுப் பயனடைந்தனர்.