நேரு கல்வி குழுமங்கள் சார்பில் பசுமையான போக்குவரத்து திட்டத்தின் முதல் படியாகக் கல்வி நிறுவன வளாகத்தில் மாணவர்களின் வாகன போக்குவரத்தை குறைக்க 25 சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தை நேரு கல்வி குழுமத்தின் செயலாளர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணகுமார் துவக்கி வைத்து நிலையான, சுற்றுச் சூழலுக்கு நட்பான போக்குவரத்தை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். மேலும், அவர் பேசுகையில்,” தினமும் வளாகத்தினுள் சைக்கிளைப் பயன்படுத்துவதால் புதிய கலாச்சாரத்தை உருவாக்குவதோடு, மாணவர்களுக்கு உடற்பயிற்சியாகவும் அமையும். இதன் மூலம் தூய்மையான சுற்றுச்சூழலும் உருவாகும்,” என்றார்.
விழாவில் நேரு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அனிருதன், பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் மணியரசன், தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் சிவராஜா, மேலாண்மை கல்வி குழுமத்தின் முதல்வர் மோசஸ் டேனியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் முதல்வர் ரவிக்குமார் மற்றும் கல்வி குழுமத்தின் பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.