கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நான்கு வகை குப்பை பிரிவு குறித்த விழிப்புணர்வு மற்றும் கள ஆய்வு நிகழ்ச்சியை காட்டம்பட்டி பஞ்சாயத்தில் நடத்தியது.

பொதுமக்களிடம் குப்பையை மூலத்திலேயே பிரித்துப் போடுவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி மற்றும் வீடு வீடாக கள ஆய்வு நடத்தப்பட்டது. மாணவர்கள் பொதுமக்களுக்கு 4 வகை குப்பை பிரிவு குறித்து விரிவாக விளக்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ கலந்து கொண்டார்.
