கே.எம்.சி.ஹெச் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் நர்சிங், பார்மசி, பிசியோதெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி பிரிவுகளில் 2025ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகளின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றன.
விழாவிற்கு கே.எம்.சி.ஹெச் மற்றும் டாக்டர் என்.ஜி.பி ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி மற்றும் அறங்காவலர்கள் டாக்டர் அருண் பழனிசாமி, மதுரா பழனிசாமி, அறக்கட்டளையின் முதன்மைச் செயல் அலுவலர் டாக்டர் புவனேஸ்வரன், தலைமைச் செயல் அலுவலர் டாக்டர் நடேசன் மற்றும்
அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
