ஸ்ரீ ராமகிருஷ்ணா இணை மருத்துவக்கல்லூரியில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது.

கருத்தரங்கில் எஸ்.என்.ஆர் சன்ஸ் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன், சிறுநீரகத்துறைத் தலைவர் மற்றும் சிறுநீரக முதன்மை ஆலோகர் டாக்டர் செழியன், சிறுநீரக ஆலோசகர் டாக்டர் மதுசங்கர், கல்லூரி முதல்வர் டாக்டர் சத்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர். சிறுநீரகஆலோசகர் டாக்டர் மது சங்கர், சிறுநீரக ஆரோக்கியம் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

மாதிரி விளக்கக்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு பிளாஸ்மாபெரிசிஸ், உறுப்புபரவல் தொழில்நுட்பம் மற்றும் டிஐஎம்ஐ  போன்ற தலைப்புகளில் செயல்முறைப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. விழாவில் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.