கோவை ஆர்.எஸ்.புரத்தில் கல்யாண் ஜூவல்லர்ஸ், தனது இரண்டாவது புதிய விற்பனை நிலையத்தை தொடங்க உள்ளது. வரும் ஜூலை 12ம் தேதி காலை 11 மணிக்கு இந்த புதிய கிளையை திரைப்பட நட்சத்திரங்கள் பிரபு கணேசன், மாளவிகா மோகனன் திறந்து வைக்கின்றனர்.
இந்த கிளையில் நகைகளின் செய்கூலி/சேதாரத்தின் மீது 30% தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. தொடக்கக் காலச் சலுகைகள் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
இங்கு முகூர்த்த திருமண நகை வரிசை, பாரம்பரிய கைவினை நகைகள், கோவில் நகைகள், அசைந்து ஒளிரும் வைரங்கள், சாலிடேர் போன்ற வைர நகைகள், வெட்டப்படாத அன்-கட் வைரங்கள், விசேஷக் கொண்டாட்டங்களுக்கான வைரங்கள், திருமண வைர நகைகள், அன்றாட பயன்பாட்டு வைர நகைகள், நவரத்தின நகைகள் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணக் கற்கள் மற்றும் வைர நகைகள் ஆகிய அனைத்து நகைத் தொகுப்புகளும் இருக்கும்.
