கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின், தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர், துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாதனை படைத்துள்ளார்.
17வது தென் மண்டல துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், கல்லூரியின் வணிகவியல் இரண்டாமாண்டு மாணவர் நார்மன் பிரிட்டோ ரிச்சர்ட், இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இதன் அடிப்படையில், அடுத்தகட்ட போட்டிகளில் பங்கேற்பதற்காக கல்லூரியிலிருந்து நார்மன் பிரிட்டோ ரிச்சர்ட், சாருமதி, ஜஸ்வந்த் ஆகிய மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களை கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி. ராமசாமி, கல்லூரிச் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், முதல்வர் கீதா, தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் ஸ்ரீதர் ஆகியோர் பாராட்டினர்.
