கோவையில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் மற்றும் கோவை மக்கள் சேவை மையம் ஆகியவை இணைந்து மணியக்காரன்பாளையம் ஸ்ரீ கிருஷ்ணா கவுண்டர் திருமண மண்டபத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமி படி பூஜை விழா நடத்தியது.
நொய்யல் ஆற்று டிரஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ சுவாமி அஜித் சைதன்யா பூஜையை தொடங்கி வைத்தார். விழாவிற்கு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் அகில பாரத தலைவர் ஈரோடு ராஜன் மற்றும் மாநில நிர்வாக செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் பாராளுமன்ற விவகார இணைச் செயலாளர் முரளிதரன் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். 18 படிகளின் சிறப்புகளின் அடையாளமாக 108 குருசாமிகளுக்கு படிகள் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு பக்தி பாடல்கள் பாடி ஐயப்பனை வழிபட்டனர்.
