கோவை ஈஷா யோக மையத்தில் தைபூசத் திருவிழா மற்றும் லிங்க பைரவி பிரதிஷ்டை தினம் நேற்று (11-02-2025)கொண்டாடப்பட்டது. இதனிடையே, நூற்றுக்கணக்கான பக்தர்கள், முளைப்பாரியால் செய்யப்பட்ட லிங்க பைரவி திருவுருவத்தை பல்லக்கில் ஏந்தி, 15 கி.மீ தொலைவுக்கு பாதயாத்திரையாக வந்தனர்.
ஈஷாவில் 2010-ஆம் ஆண்டு தைபூசத் நாளில் சத்குரு பிரதிஷ்டை செய்த லிங்க பைரவி, ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில், பக்தர்கள் ‘பைரவி சாதனா’ மற்றும் அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்றனர். உலகம் முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.