ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் ‘சிந்தனைக் கவிஞர் கவிதாசன் படைப்புலகம் – பன்முக ஆய்வு’ பன்னாட்டுக் கருதரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் நிறுவனங்கள் தலைவர் ராமசாமி கலந்துகொண்டார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமையுரை வழங்கினார். கே.ஜி.மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் முன்னிலை உரை வழங்கினார்.

பூ.சா.கோ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேனாள் முதல்வர் மற்றும் செயலர் சம்பத்குமார், விஜயா பதிப்பகம் நிறுவனர் வேலாயுதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் ஆய்வுக் கோவை வெளியிடப்பட்டது.