ரிவர் என்ற மின் மோட்டார்சைக்கிள்(EV) நிறுவனம் தமிழகத்தில் தனது இரண்டாவது கிளையை கோவை இராமநாதபுரம், திருச்சி சாலையில் தொடங்கியுள்ளது. நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக சந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் நந்தினி ரங்கசாமி கலந்துகொண்டு புதிய கிளையை துவக்கி வைத்தார். மேலும், இதில் முதல் எஸ்.யூ.வீ (SUV) மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்யப்பட்டது. ரிவர் நிறுவனத்தின் நிறுவனர் அரவிந்தன் மணி, ராமநாதபுரம் கிளையின் நிர்வாக இயக்குநர் அஸ்வினி ஆகியோர் கலந்து கொண்டனர்.