தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் நடத்தும் நிரல் திருவிழா எனும் மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டியின் 3ம் பதிப்பில் கோவை இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ‘மின்சார தள்ளுவண்டி’ தமிழ்நாடு முழுவதும் இருந்து 365 பொறியியல் கல்லூரிகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 24,411 திட்ட யோசனைகளில், இக்கல்லூரியின் திட்டம் TNSDC–NIRAL திருவிழா 3.0 ஹேக்கத்தானின் இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்ட மாநில அளவிலான சிறந்த 100 திட்ட யோசனைகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.

இது பற்றி இயந்திரப் பொறியியல் துறையின் இணைப் பேராசிரியரும் இத்திட்டத்தின் வழிகாட்டியுமான டாக்டர் ராஸ்மாத்யூ கூறுகையில், இந்த மூன்று சக்கர மின்சாரத் தள்ளுவண்டி, சாய்வு அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பத் தீர்வு, பொருட்களை ஏற்றுவதையும் இறக்குவதையும் எளிதாக்கி, பணிச்சுமையைக் குறைப்பதுடன், பாதுகாப்பையும் பணித்திறனையும் மேம்படுத்த உதவுகிறது என்று தெரிவித்தார்.

இந்த சாதனையை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயல் அறங்காவலர் மற்றும் செயலர் பிரியா சதீஷ் பிரபு, முதல்வர் ஜெயா, டீன் – இன்னோவேஷன், சிவா ,துறைத் தலைவர் கே. அகில் மற்றும் பேராசிரியர்கள் ,மாணவர் குழுவினருக்கும் வழிகாட்டிய பேராசிரியருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.