கோவை நவ இந்தியாவில் இயங்கும் முன்னணி கலை அறிவியல் கல்லூரிகளில் ஒன்றான இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், 2026-27 கல்வியாண்டில் முதலாமாண்டு இளநிலை பாடப்பிரிவுகளில் இணைந்துள்ள மாணவ, மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி வியாழன் அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களில் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் தலைமை தாங்கினார், செயலாளர் பிரியா சதிஷ்பிரபு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் நிறுவனத்தின் மனித வளத்துறை இயக்குனர் கவிதாசன் பங்கேற்றார். கல்லூரியின் பல்வேறு துறை தலைவர்கள், நிர்வாகிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
LAMPLIGHTI scaled
எதனால் இந்துஸ்தான் சிறப்பான கல்லூரி?

“முழுமையான கல்வி என்பதை வழங்கும் நோக்கம் கொண்டது இந்துஸ்தான் கலைக்கல்லூரி. அதன் காரணமாகவே ஒரு கலைஅறிவியல் கல்லூரியாக இருந்தாலும் இங்கு பல்வேறு தொழில்துறை நிறுவனங்களுடனமும், தொழில்முறை அமைப்புகளுடனும்  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 120 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது,” என கல்லூரி முதல்வர் கூறினார் பொன்னுசாமி.
PRINCIPALHICAS scaled

“திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க, பயிற்சி-பணி வாய்ப்புகள் (Internships) வழங்க தொழில்துறை நிறுவனங்களுடன் கூட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேசிய உயர்கல்விநிறுவன தரவரிசை பட்டியலில் இந்தியாவின் தலைசிறந்த 150 கலைக்கல்லூரி வரிசையில், இக்கல்லூரி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. சென்ற கல்வி ஆண்டில் பயின்றவர்களில் 75% நல்ல நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்,” என்பது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை பெற்றோர்களிடம் விளக்கினார்.

கல்வி என்பது தவம்

“இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் கீழ் உள்ள 14 கல்லூரிகளில் 22,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலுகின்றனர்,” என கூறிய இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், “கல்வி என்பது ஒரு தவம் அதை கலையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
OWNEROFHICAS scaledமாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்றுபவர்களாக இருக்கவேண்டும் எனவும், நிச்சயமாக இந்துஸ்தான் கல்லூரியில் இருந்து பயிலும் மாணவர்கள் பாதுகாப்பான சூழலில் கல்வி கற்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இங்கு மாணவர்கள் பயின்று வெளியே செல்லும்போது, வேலைவாய்ப்புடன் செல்லவேண்டும் எனும் குறிக்கோளோடு தான் இங்கு அனைவரும் செயல்படப்போகின்றனர் என பெற்றோர்களிடத்தில் உறுதியளித்தார்.

உன்னை அடையாளம் கண்டுகொள்

” வெற்றி என்பது பிறருக்கு உன்னை அடையாளம் காட்டும், தோல்வி தான் உன்னை உனக்கு அடையாளம் காட்டும். எனவே தோல்வியை கண்டு அஞ்சாததே,” என கூறினார் சிறப்பு விருந்தினர் கவிதாசன்.
SUTDENTSCROWD scaled

சர்க்கரைக்கு கூட அதற்கான தகுதி இருந்தால் அதை விரும்பும் எறும்பு கூட தேடி வரும். வெற்று மண்ணாக இருந்தால் எதுவும் நாடி வராது. எனவே தகுதியை வளர்த்து கொள்ளவேண்டும். தன்னம்பிக்கை + குறிக்கோள் + திறமை = தகுதி. மாணவர்கள் இவை மூன்றோடு இருக்கவேண்டும்.

வாழ்க்கையில் திறன், தைரியம், அர்ப்பணிப்பு, படைப்பாற்றல், மற்றும் நற்பண்பு ஆகியவற்றை கொண்ட மனிதன் உயரத்தை அடைவான். எனவே இந்த குணங்களை கொண்டவர்களாக மாணவர்கள் விளங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.