கோவை கற்பகம் மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் வசந்தகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக இந்திய விமானப்படையின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனர் ஏர் மார்ஷல் டாக்டர்.சந்தீப் தரேஜா கலந்து கொண்டு, 163 இளங்கலை மருத்துவர்களுக்கும், 10 முதுகலை மருத்துவர்களுக்கும் பட்டங்களை வழங்கினார்.
பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 27 மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் முருகையா, கல்லூரியின் முதல்வர் மருத்துவர் சாந்தா அருள்மொழி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
