ரூட்ஸ் நிறுவனங்கள் சார்பில் கணபதி அரசு பள்ளிக்கு உதவி
கோவை கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூட்ஸ் குழுமத்தின் சார்பில் ரூ.50,000 மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன
நிகழ்ச்சியில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் மற்றும் தலைமையாசிரியர் சிவக்குமார் முன்னிலையில், ரூட்ஸ் குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக ரூ.50,000 மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டுப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய கவிதாசன், கல்வியுடன் விளையாட்டிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும். விளையாட்டு உடல் ஆரோக்கியம், ஒழுக்கம், தன்னம்பிக்கை, தலைமைத்துவப் பண்பு மற்றும் குழு ஒற்றுமையை வளர்க்கும் சிறந்த கருவி என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
