பொள்ளாச்சி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக அசோக் லேலண்ட் நிறுவனத்தின் (சென்னை தொழில்நுட்ப மையம்) ஒழுங்குமுறை மற்றும் ஹோமோலோகேஷன் பிரிவுத் தலைவர் முத்துகுமார் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
அவர் பேசுகையில்: அனைத்துப் பொறியியல் துறைகளுக்கும் ‘டிப்ளமோ’ கல்வியே அடிப்படை. தொழில் துறையில் வெற்றிகரமான பணி வாய்ப்புகளைப் பெற ஒழுக்கம் மற்றும் தொடர்ச்சியாக கற்றல் ஆகியவை அவசியம் என்றார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மொத்தம் 15 தங்கப் பதக்கங்கள், 15 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 15 வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன; மொத்தம் 391 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
நிகழ்ச்சியில் என்.ஐ.ஏ நிறுவனங்களின் இணைச் செயலாளர் கோவிந்தசாமி, கல்லூரி முதல்வர் அசோக், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
