கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின், கே.பி.ஆர். பிசினஸ் ஸ்கூல் சார்பில், முதலாம் ஆண்டு முதுநிலை வணிக நிர்வாக மாணவர்களுக்கான அறிமுகம் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

12. a scaled

கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் செயலாளர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில்: செயற்கை நுண்ணறிவு இன்று அனைத்து துறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல்களை எளிதாகவும் விரைவாகவும் பெறும் வசதியை அது உருவாக்கியுள்ளது.

எனவே, மாணவர்கள் செயற்கை நுண்ணறிவுடன் போட்டியிடுவதற்குப் பதிலாக, அதனால் செய்ய முடியாத தனித்திறன்கள், சிந்தனைத் திறன் மற்றும் மனிதநேயப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஒழுக்கம் என்பது செயற்கை நுண்ணறிவால் வழங்க முடியாத முக்கியமான மனிதப் பண்பாகும் என்றார்.

கல்லூரியின் முதல்வர் அகிலா முத்துராமலிங்கம் பேசுகையில்: கே.பி.ஆர்.மில் நிறுவனத்தின் ரூ.42 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சியை மாணவர்கள் சிறந்த முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

துவக்க நாளில், சிறப்பு விருந்தினராக அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குநர் கே.டி. சீனிவாச ராஜா கலந்து கொண்டு, நேர மேலாண்மை, மன உறுதி, இலக்கு நிர்ணயம், மதிப்புக் கூட்டுதல் மற்றும் தொழில்முனைவோர் சிந்தனையின் அவசியம் குறித்து பேசினார். மாணவர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமின்றி, வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும் வளர வேண்டும் என்றார்.

தஞ்சாவூர் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநர் பழனிமுத்து, ‘புதுமை தவிர்க்க முடியாதது’ என்ற தலைப்பில் பேசினார்.