நாளை (9.6.26) முதல் அடுத்த 45 நாட்களுக்கு கோவை மக்கள் மகிழும் வண்ணம் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அரசு பொருட்காட்சி நடைபெறவுள்ளது.
கோவை வ.உ.சி மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட 29 அரசுத் துறைகள் சார்பில் அரங்குகள் இடம்பெறுகின்றன.
இத்துடன் வேடிக்கை, விளையாட்டு, உணவு ஸ்டால்கள் இடம்பெறுகின்றன. இதன் துவக்கவிழாவில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சம்பத் குமார் உடன், பள்ளி கல்வித்துறை & செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

