கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு சார்பில் ’21 ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழிக் கல்விக்கான தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகள்’ குறித்த ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
மலேசியாவில் இயங்கிவரும் மலாயா பல்கலைக்கழக மொழியியல் துறை இணைப் பேராசிரியர் செல்வஜோதி, 21 ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழி கற்றல் கற்பித்தலும் ஆய்வு அணுகுமுறைகளும் என்ற தலைப்பில், தொல்காப்பியத்தில் ஆய்வியல் அணுகுமுறைகள் அமைந்துள்ளன என்றும், எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்களிலும் குவிந்துகிடக்கும் அறிவியல் கோட்பாடுகள் குறித்தும் விளக்கினார்.

மலாயா பல்கலைக்கழகத்தின் மலேசியா மொழிகள் மற்றும் பயனாக்க மொழியியல் துறைத் தலைவர் இளந்தமிழ், தமிழும் தகவல் தொழில்நுட்பமும் என்ற தலைப்பில், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் இன்று வளர்ந்து வந்த ஜேட் ஜிபிடி, ஜெமினி போன்ற செயலிகள் இக்காலத்தில் எவ்வாறு தொழில் வளர்ச்சிக்கு உதவுகின்றன என்றும், மாணவர்கள் தங்களை அதில் எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் பேசினார்.
நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் சங்கீதா, தமிழ்த்துறை பொறுப்பு தலைவர் ராஜலட்சுமி, சுயநிதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் சரவணமூர்த்தி, குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

