ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50வது ஆண்டு பொன்விழா, ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனையின் 25வது ஆண்டு வெள்ளிவிழா கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி, மாலை 5 மணிக்கு கொண்டாடப்பட உள்ளது.

இதில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார் என, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். மருத்துவமனையின் சாதனைகள், மைல்கல் உள்ளிட்ட பல தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

உடன், இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சவுந்தரராஜன், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன், மருத்துவ இயக்குநர் ராஜகோபால் உள்ளிட்டோர் இருந்தனர்.

