ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு வசதிகள் கொண்ட அவசர சிகிச்சை மையத்தை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி, மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ்.எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் துணைத்தலைவர் கோபிநாத் நன்றி கூறினார்.