டாக்டர் எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில், ‘வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல் குமார் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கருத்தரங்கம் நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் அனிதா வரவேற்றார். எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அதிகாரி டேனியல் தலைமை உரையாற்றினார். தென் ஆப்பிரிக்காவின் டர்பன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரோசலின் கோவென்டர் தொடக்க உரையாற்றினார்.
மொரீஷியஸ் உயர்கல்வி நிறுவனத்தின் இயக்குநரும் பதிவாளருமான பாசிலா பானு வாழ்த்துரை வழங்கினார். தென் ஆப்பிரிக்காவின் டர்பன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பொறுப்பு இயக்குநர் ஷோபா முதன்மை உரையாற்றினார்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், நேபாளத்தின் மாதேஷ் பல்கலைக்கழகப் பேராசிரியரும் முதன்மையருமான அஞ்சய் குமார் மிஸ்ரா முதன்மை உரையாற்றினார். முதுநிலை வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் நிருபா ராணி, கருத்தரங்க அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த கல்வி வல்லுநர்கள் தலைமையில் நடைபெற்ற அமர்வுகளில், 246 ஆய்வாளர்கள் தங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
அவற்றில் ஒன்பது சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டன. ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
