கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி மற்றும் ஈஷா அறக்கட்டளை இணைந்து செயல்படுத்தும் நவீன எரிவாயு மயானத்தில் தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் ‘இலவச தகன சேவை’ தொடங்கப்பட்டுள்ளது.

ஈஷா யோக மையத்தைச் சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்கள், அவர்களின் பகுதிக்கு அருகிலேயே ஒரு மயானத்தை அமைத்து தருமாறு அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, ஈஷா அறக்கட்டளை பஞ்சாயத்து அனுமதியுடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட இதர அரசு துறைகளின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நவீன எரிவாயு மயானத்தை அமைத்தது.

தற்போது இந்த நவீன எரிவாயு மயானம் முழுமையான செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் தொண்டாமுத்தூர் வட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இலவச தகன சேவை தொடங்கப்பட்டுள்ளது.