ஸ்வர்கா பவுண்டேஷன் சார்பில் 4 நலத்திட்டங்களின் துவக்க விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் சம்பத் குமார் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் நிர்வாக அரங்காவலர் சொர்ண லட்சுமி குரு பிரசாத் வரவேற்றார். ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் கட்ட ரவி தேஜா முன்னிலையில் 4 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டது.

இதில் தமிழ்நாடு முழுவதும் சாய்வுத்தள வசதியுடன் கூடிய, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான 5 பிரத்யேக வாடகை வாகனங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களால் நடத்தப்படும் உணவகம், சக்கர நாற்காலிகள் வழங்குதல், கோவையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், ரயிலின் உள்ளே செல்லக்கூடிய சக்கர நாற்காலிகள் மற்றும் சாய்வுத்தளங்களை வழங்குதல் ஆகிய திட்டங்கள் தொடங்கப்பட்டது.

