பொள்ளாச்சி, என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் 71ஆம் ஆண்டு நிறுவனர் தின விழா கல்லூரி அரங்கில் வெள்ளிக்கிழமை (7.2.2025) நடைபெற்றது. நிகழ்வில், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான சைதை சா.துரைசாமிக்கு “கொங்குநாட்டுச் சாதனையாளர்” விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா நிறுவனர் நினைவு நாள் பேருரை வழங்கினார். இவ்விழாவில், என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்கள் மற்றும் சக்தி சுகர் லிமிடெட் தலைவர் மாணிக்கம், என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன், செயலர் ராமசாமி, சக்தி சுகர்ஸ் லிமிடெட் துணைத் தலைவர் பலசுப்பிரமணியம் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.