கோவையின் திரையரங்க மற்றும் திரைப்பட அனுபவத்தை முற்றிலும் அடுத்தகட்டத்திற்கு எடுத்து சென்ற பிராட்வே சினிமாஸ் குழுமம் இப்போது திருப்பூரில் தனது மல்டி ப்ளெக்ஸ் வளாகத்தை திறந்துள்ளது.

திருப்பூரில் 4 திரை அரங்குகள் கொண்ட இந்த மல்டிப்ளெக்ஸ் வளாகத்தை சமீபத்தில் இந்நிறுவனம் திறந்தது. வரும் மார்ச் 6ம் தேதி முதல் வடிக்கையாளர்களுக்காக இது திறக்கப்பட உள்ளது.
கோவையில் கிடைத்த வரவேற்புக்கு பின்னர் மேற்கு தமிழகத்தில் பிராட்வே சினிமாஸ் விரிவாக்கத்தை செய்துள்ளது. 4 திரை அரங்குகளில் மொத்தம் 1121 இருக்கைகள் உள்ளன.

அரங்கம் அனைத்தும் டால்பி அட்மோஸ் தரத்தில் இருக்கும். ஹைப்பர் எக்ஸ் (HyperX) என்று சொல்லக்கூடிய உயர் திரை அளவு இதில் இடம்பெற்றுள்ளன. இங்கு வாடிக்கையாளர்களுக்கு மிக சிறந்த திரைப்பட அனுபவம் கிடைக்க கட்டமைப்புகள் நட்சத்திர விடுதி அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

