பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் சமூக ஒருங்கிணைப்பு மாநாடு 2025 நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஹாரதி, கல்லூரிச் செயலர் யசோதாதேவி வாழ்த்துரை வழங்கினர்.
பிரிகால் லிமிடெட் தலைவரும், சிறுதுளியின் நிர்வாக அறங்காவலருமான வனிதா மோகன் மாநாட்டை தொடங்கி வைத்து, நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் பாலாஜி நாயுடு, நோய்த்தடுப்பு சிகிச்சை மற்றும் சமூக சுகாதார முயற்சிகளில் தனது அனுபவம் குறித்து பேசினார்.
காக்னிசண்ட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் இயக்குநர் பாலகுமார் தங்கவேலு, நிறுவனச் சிறப்பை அடிமட்ட வளர்ச்சியுடன் இணைக்கும் புதுமையான கட்டமைப்புகள் குறித்து விவாதித்தார். சென்னை ரைட் டாட்ஸ் நிறுவனர் வித்யா போஜன், இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் தலைமைத்துவத்திற்கான திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தார்.
